Radhalakshmi. S Online Tamil tutor, spoken written tamil trainer
No reviews yet

மாணவர் மைய கற்பித்தலையே என்னுடைய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறேன்.மாணவர்களுக்கு வகுப்பானது எளிமையாகவும், புரியும் வகையில் நடத்த முடியும்.வகுப்பில் எந்தளவு கற்பித்தல் திறன் உள்ளதோ அதை விட அதிகமாகவே என்னால் வழங்க இயலும். தனித்தனி மாணவர்கள் என்பதால் இன்னும் சிறப்பாக, ஆழமாக, கவனம் செலுத்த இயலும்.

பள்ளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்திய அனுபவம் உண்டு.கதைகள் மூலமாகவும், பல கருத்துக்கள் பகிரப்பட்டும், விளக்கங்கள் வாயிலாகவும் மிக எளிதாக கற்பிக்கப்படும். இலக்கிய கதைகள் மூலமாக வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்ள முடியும். புரிந்து கொண்டு படிக்க எழுத மிக சுலபமான முறையில் கற்றுக் கொள்ள முடியும். பல நீதிக்கதைகள், புராணக்கதைகள் மூலமாக பல அறிவு சார்ந்த மற்றும் அறிவியல் சார்ந்த முறைகளில் கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலமாக நாம் தமிழில் நன்றாக எழுதவும்,படிக்கவும் முடியும்.

பேச்சுத்தமிழ்,எழுத்துத்தமிழ் இரண்டையும் கற்பிக்கிறேன். மேலும் பிற நாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு கற்பித்த அனுபவமும் உண்டு. கற்பித்தலில் அளப்பரிய ஆவலும் ஆர்வமும் உள்ளது. கற்றல் என்பது அன்றாடம் நிகழக் கூடியது. கற்றல் இல்லையேல் மனித சமூகம் வளர்ச்சி அடையாது. கற்போம் கற்பிப்போம் அறியாமையைத் தவிர்ப்போம்

என் தந்தை தமிழ் பண்டிதர்.அவரிடம் இருந்து தான் நான் தமிழ் கற்றேன். நான் கற்ற தமிழை, தமிழின் வளத்தை பிறருக்கும் தர வேண்டும் என்று பேரவா கொண்டுள்ளேன். நான் கற்ற தமிழை பிறருக்கும் கற்றுத் தந்து தமிழை வளர்க்க வேண்டும் என்று எண்ணி இப்பணியைச் செம்மையுற செய்ய ஆவல் கொண்டுள்ளேன். மேலும் எனது கற்பித்தல் வகுப்பிற்கு laptop with digital pen உபயோகித்து பாடம் நடத்துகிறேன். இது மாணவர்களுக்கு உபயோககரமாகவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும்.

நன்றி. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

Subjects

  • Tamil CBSE Grade 1-Grade 12

  • Tamil classes for beginners

  • Tamil (second language) Beginner-Expert

  • Tamil for beginners

  • Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert

  • சிறுவர் நீதி கதைகள் Grade 1-Grade 10


Experience

  • Tamil teacher (Jun, 2015Jun, 2022) at Hayagrivas International School,Sivakasi
    Class teacher and teaching tamil
  • Tamil teacher (Jun, 2009Jun, 2011) at Southside International School, Mettamalai
    Class teacher and teaching Tamil

Education

  • B.ED.DEGREE (Jul, 2008Aug, 2009) from PSR Collegescored 76.16
  • MA TAMIL (Jun, 2006Apr, 2008) from V V V college, virudhunagarscored 80.56 per
  • BA TAMIL (Jun, 2003Apr, 2006) from SFRC - Sivakasiscored 72

Fee details

    300500/hour (US$3.165.26/hour)

    நேரம்,இடம்,உள்ளடக்கம் பயணம் போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் கட்டணம் மாறுபடும்


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.