வணக்கம்! நான் ஒரு தமிழ் ஆசிரியர். தமிழின் அழகை மாணவர்கள் சுலபமா புரிஞ்சுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. இப்போ பள்ளி மாணவர்களுக்காக தனியா ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப் போறேன். இலக்கணம், வாசிக்கிறது, எழுதுறது, பேசுறது, தேர்வுக்கு தயாராகுறது எல்லாத்தையும் எளிமையா, தெளிவா சொல்லித் தருவேன். மாணவருக்கு அந்த சந்தேகம் தெளிவாகப் புரியுற வரைக்கும் விளக்கம் சொல்லுவேன். நான் திட்ட மாட்டேன். பொறுமையா எடுத்துச் சொல்லுவேன்.
இப்போ நாம வாழுறது ஒரு இணைய உலகம். ஊர், நாடு, எல்லை எதுவும் இல்ல. மொபைல் இருந்தா போதும், உலகத்தோட எந்த மூலைல இருந்தாலும் படிக்கலாம், பேசலாம். அதனால தான் தமிழையும் ஆன்லைன்ல கொண்டு வரேன்.
தமிழ் மொழியோட அழகை இந்த உலகத்துல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் கொண்டு போய் சேர்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன்.
அமெரிக்கால இருக்கிற தமிழ் குழந்தையா இருந்தாலும் சரி, சென்னைல இருக்கிற பாட்டியா இருந்தாலும் சரி, எல்லாரும் நம்ம தாய்மொழியை ரசிக்கணும். திருக்குறள் சொல்ற நல்ல விஷயத்தையும், பாரதியோட வீரத்தையும் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்.
இந்த வகுப்பு பள்ளிக்கூட பசங்களுக்கு மட்டும் இல்ல.
வெளிநாட்டுல இருந்து தமிழ் கத்துக்க ஆசைப்படுறவங்க, கல்யாணம் ஆகி தமிழ் மறந்து போனவங்க, it-ல வேலை பார்த்துட்டு சொந்த மொழியை தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறவங்க, யாரா இருந்தாலும் வாங்க. வயசு ஒரு தடை இல்ல. தமிழ் மேல ஒரு சின்ன பிரியம் இருந்தா போதும், நான் ஆரம்பத்துல இருந்து சொல்லித் தரேன். அ-னா, ஆ-வனா-ல இருந்து ஆரம்பிக்கலாம்.
தமிழை சுலபமாவும், சுவாரஸ்யமாவும் கத்துக்கணும்னா, என்னோட ஆன்லைன் வகுப்புக்கு வாங்க.
அன்போட வரவேற்கிறேன்.
Experience
No experience mentioned.
Fee details
₹200–300/hour
(US$2.11–3.16/hour)
Fee may vary based on the capability of the student to grasp the concept